முன்னாள் சபாநாயகர் தனபால் உடல்நிலை – நலம் விசாரித்த முதலமைச்சர்!
முன்னாள் சபாநாயகர் தனபால் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முன்னாள் சபாநாயகர் தனபால் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தனபால் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் முதல்வர், தொலைபேசி மூலம் தொடர்வுகொண்டு நலம் விசாரித்தார். அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு திடீர் உடல் நலக் குறைவு காரணமாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.