#BREAKING: முன்னாள் காவல் ஆய்வாளர் சிபிசிஐடி போலீசாரால் கைது!
கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த முன்னாள் காவல் ஆய்வாளர் சரவணன் கைது.
அண்ணாநகர் முன்னாள் காவல் ஆய்வாளர் சரவணன் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை திருமங்கலத்தில் தொழிலதிபர் ராஜேஷை கடத்தி சொத்துக்களை அபகரித்த புகாரில் பல மாதங்களாக தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த, சரவணன் தற்போது கைது செய்யப்பட்டார். கடந்த 2019ல் தொழிலதிபர் ராஜேஷை கடத்தி மிரட்டி சொத்துகளை அபகரித்த புகாரில், முன்னாள் காவல் ஆய்வாளர் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த ஓராண்டாக தலைமறைவாக இருந்த சரவணனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தொழிலதிபர் ராஜேஷை கடத்தி சொத்துக்களை எழுதி வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கிட்டத்தட்ட 7 மாதங்களாக தலைமறைவாக இருந்தார் சரவணன். மேலும் இந்த வழக்கில் உதவி ஆணையர் சிவகுமார் இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும், தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.