வரும் 21 ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தரும் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி.!
காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி வரும் 21 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
வயநாடு முன்னாள் எம்.பி ராகுல்காந்தி வரும் 21 ஆம் தேதி தமிழகம் வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் நினைவு தினத்தையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நினைவிடத்தில் அவருக்கு ராகுல் காந்தி மரியாதையை செலுத்துகிறார். இதற்காக ராகுல் மற்றும் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் தமிழகம் வருகை தருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கு முந்தையதினம் மே 20இல் கர்நாடகாவில் முதலமைச்சர் பதவியேற்பு விழாவிலும் ராகுல் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.