மீண்டும் அதிமுகவில் இணைந்ததாக வரும் செய்தி தவறானது என முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் தெரிவித்தார்.
திருப்பூரில் கடந்த 24-ஆம் தேதி நடைபெற்ற பாஜக கூட்டத்தில் அக்கட்சி தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் பாஜகவில் இணைந்த சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் இன்று அதிமுக எம்எல்ஏ ஆர்.பி. உதயகுமார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் என தகவல் வெளியானது.
இதுகுறித்து சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் கூறுகையில், மீண்டும் அதிமுகவில் இணைந்ததாக வரும் செய்தி தவறானது. அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ளதால் இரு கட்சிகளிலும் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன். ஒரு தாய் வீட்டு பிள்ளைகள் நாங்கள், பாஜக அதிமுக கூட்டணி தொடர வேண்டும்; தமிழகத்தை ஆள வேண்டும் என தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்த 11 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் சோழவந்தான் மாணிக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…