முன்னாள் எம்.எல்.ஏ.கோவை செல்வராஜ் மரணம்! முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
நேற்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்த கோவை செல்வராஜூக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை : கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த கே.செல்வராஜ். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆவார். ஆனால், தற்போது அவர் திமுகவில் செய்தி தொடர்பு துணைச் செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது 3-வைத்து மகன் வெங்கட்ராம் திருமணம் திருப்பதியில் நேற்று நடைபெற்றது. இதில், பங்கேற்று விட்டு வீடு திரும்பிய நேரத்தில், மலையில் இருந்து இறங்கிய போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இந்த துயரைச் சம்பவம் திமுகவிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை செல்வராஜூக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
அவர் வெளியிட்ட அந்த அறிக்கையில், “முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளருமான கோவை செல்வராஜ் திடீரென்று மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன்.
அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, கட்சியின் கொள்கைகளை, கருத்துகளை விவாதங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் ஆணித்தரமாக எடுத்து வைத்தவர்.
ஆனால் இன்று மகனின் திருமணம் நடந்தேறி வந்து கொண்டிருந்தபோதே, அவருக்குத் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்ற செய்தி என்னை ஆழ்ந்த வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.
“முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளருமான கோவை செல்வராஜ் அவர்கள் திடீரென்று மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்… pic.twitter.com/VdyvrQRVhe
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 8, 2024
கோவை செல்வராஜை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”, என மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துப் பதிவிட்டிருந்தார்.
கோவை செல்வராஜின் உடல் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின் அதனைத் தொடர்ந்து அவரது இறுதி சடங்கு இன்று நடைபெற உள்ளது.