ஆட்சி மாற்றம் வந்தால் மாட்டிக்கொள்வீர்கள்.. அதிகாரிகளுக்கு மிரட்டலா.?! முன்னாள் அமைச்சர் பேச்சால் சர்ச்சை…
அதிகாரிகள், காவல்துறையினர் ஆளுகட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால், ஆட்சி மாற்றம் வரும்போது மாட்டிக்கொள்வீர்கள். எங்களுக்கு ஒன்றுமில்லை. உங்களுக்கு தான் பிரச்சனை. – ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியுள்ளார்.
தமிழக அரசு மின்கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைதாங்கி பேசினார். அதே போல, மற்ற மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அதே போல புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், அதிகாரிகள், காவல்துறையினர் ஆளுகட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால், ஆட்சி மாற்றம் வரும்போது மாட்டிக்கொள்வீர்கள். எங்களுக்கு ஒன்றுமில்லை. உங்களுக்கு தான் பிரச்சனை. ‘ என்று பேசியிருந்தார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி சம்பந்தமான இடங்களில் லஞ்சஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர். அது சம்பந்தமாக தான் முன்னாள் அமைச்சர் இவ்வாறு பேசி, அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுகிறார் என்றாவாறு தமிழக அரசியல் வட்டாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.