பருவமழையை எதிர்கொள்ள திமுக அரசு எந்த முன்னெச்செரிக்கையும் எடுக்கவில்லை.! முன்னாள் அதிமுக அமைச்சர் விமர்சனம்.!
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள திமுக அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்பது கள நிலவரத்தில் தெரிகிறது. – அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சனம்.
அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் இன்று செய்தியார்களை சந்தித்து திமுக அரசு மீது பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக இருக்கும் பிரச்னையை தற்போது தீர்த்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதற்கு பதில் கூறும் விதமாக ஆதாரபூர்வமாக எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் அறிக்கைக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் தான் முதல்வர் இருக்கிறார்.’ என குற்றம் சாட்டினார்.
மேலும், ‘ வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள திமுக அரசு எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்பது கள நிலவரத்தில் தெரிகிறது. அம்மா ஆட்சி காலத்தில் தான் வெள்ள தணிப்பு நடவடிக்கை என கடலோர மாவட்டங்களை பருவமலையில் இருந்து பாதுகாக்க திட்டம் கொண்டுவந்தார். ‘ எனவும்,
அதனை எடப்பாடி பழனிச்சாமி வெள்ள தணிப்பு நடவடிக்கை என திறமையான அரசு அதிகாரிகளை நியமித்து செயல்படுத்த தொடங்கினார். ஆனால், சென்னை மேயராக இருந்த போது மு.க.ஸ்டாலின் மழைநீர் வடிகால் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.’ என உதயகுமர் குற்றம் சாட்டினார்.