அமைதியான முறையில் போராடிய முன்னாள் அமைச்சர், திருமங்கலம் சட்டமன்றஉறுப்பினர், திரு.உதயகுமார் அவர்களையும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.அய்யப்பன் அவர்களையும், கைது செய்த இந்த விடியா அரசை கண்டிக்கிறேன் என ஈபிஎஸ் ட்வீட்.
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால், உரிய அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட 200 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடந்த அம்மா அரசில் பொதுமக்களுக்கும், உள்ளூர் வாசிகளுக்கும், விவசாயிகளுக்கும் எந்தவித பாதிப்புமின்றி செயல்பட்டு வந்த மதுரை கப்பலூர் சுங்க சாவடி தற்போது அனைத்து தரப்பினருக்கும் இடையூறாக செயல்பட்டுவரும் நிலையில் அதனை அகற்ற கோரி,அமைதியான முறையில் போராடிய முன்னாள் அமைச்சர், திருமங்கலம் சட்டமன்றஉறுப்பினர், திரு.உதயகுமார் அவர்களையும், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு.அய்யப்பன் அவர்களையும், கைது செய்த இந்த விடியா அரசை கண்டிக்கிறேன். திரு.உதயகுமார் அவர்களிடத்தில் திமுக அரசின் அடக்குமுறை செயல்கள் குறித்து தொலைபேசியில் விசாரித்தேன்.’ என பதிவிட்டுள்ளார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…