எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு எடப்பாடியார் தான்.! எஸ்.பி.வேலுமணி பரபரப்பு விளக்கம்.! 

SP Velumani - Edappadi Palanisamy

சென்னை: அதிமுகவிற்குள் பிளவு எதுவும் இல்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்துள்ளார்.

அதிமுகவிற்குள் பிளவு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உடன் கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில், குறிப்பிட்ட பத்திரிகை தினமும் எங்களை விமர்சிக்கும் வகையில் செய்திகளை பதிவிடுகிறது. அதிமுகவில் , புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதாவிற்கு பிறகு நாங்கள் ஏற்றுக்கொண்ட தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.

அம்மா மறைவிற்கு பிறகு ஆட்சியை கைப்பற்றி, கட்சியை மீட்டெடுத்தவர். இரட்டை இலையை மீண்டும் கொண்டு வந்தவர் எடப்பாடி பழனிசாமி. 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சி கொடுத்தார். மக்களவை தேர்தலுக்காக கடுமையாக வேலை பார்த்துள்ளோம். தற்போது தேர்தல் முடிந்ததால் சற்று ஓய்வில் இருக்கிறோம். இருந்தும் தண்ணீர் பந்தல் திறப்பது, கோவில் விழாக்களில் பங்கேற்பது என்று செயல்பட்டு கொண்டு இருக்கிறோம்.

எங்களுக்குள் பிளவு என யாரோ கிளப்பி விடுகிறார்கள். உலகின் 7வது பெரிய கட்சி. 2 கோடி தொண்டர்கள் கொண்ட கட்சி அதிமுக. அதிமுகவில் எந்த முடிவு எடுத்தாலும் எடப்பாடி பழனிச்சாமி எங்களிடம் கலந்து ஆலோசித்து தான் எடுக்கிறார். அடுத்த சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வென்று எடப்படியார் தமிழக முதலமைச்சர் ஆவார். கோவை மாவட்டத்தில் 3 ஆண்டுகளில் திமுக ஆட்சியில் எதுவும் செய்யவில்லை. மக்களவை தேர்தலில் எடப்பாடியார் பிரச்சாரம் செய்தது போல யாருமே பிரச்சாரம் செய்யவில்லை. கண்டிப்பாக 40 தொகுதிகளிலும் அதிமுக வெல்லும். எங்களுக்குள் (அதிமுக) எந்த பிரச்னையும் இல்லை எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்