தென்னரசு என்ற பெயருக்கு விளக்கமளித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்..!
வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், தென்னரசு என்ற பெயருக்கு விளக்கமளித்துள்ளார்.
வரும் பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சியினர் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈபிஎஸ் – ஓபிஎஸ் என இருதரப்பாக செயல்பட்டு வரும் நிலையில், ஈபிஎஸ் தரப்பில் அதிமுக வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக தென்னரசு போட்டியிடுவார் என இபிஎஸ் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள், தென்னரசு என்ற பெயருக்கு விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், தென் மாவட்டத்தில் நடைபெறும் தேர்தலில், கோட்டையில் அரசாக அமருகின்ற காலம் வெகு விரைவிலே இருக்கிறது என கூறி வாழ்த்தியுள்ளார்.