#Breaking:”அதிமுகவை வழிகாட்டு குழுதான் வழிநடத்த வேண்டும்” – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!

Published by
Edison

சென்னை:அதிமுகவை வழிகாட்டு குழுதான் வழிநடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கினைப்பளார் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று காலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மட்டுமல்லாமல் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள்,தலைமைக் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

இக்கூட்டத்தில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் செயற்குழு கூட்டம்,சசிகலா விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுவதாக கூறப்படுகிறது.மேலும்,டிசம்பர் மாதத்தில் செயற்குழு கூட்டத்தை நடத்த அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இதனைத் தொடர்ந்து,அதிமுகவில் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 11- லிருந்து 18 ஆக விரிவுப்படுத்த வேண்டும் என்று  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது.மேலும்,வழிகாட்டுதல் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தியதாக கூறப்பட்டது.

இந்நிலையில்,அதிமுகவை வழிகாட்டு குழுதான் வழிநடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார். வழிகாட்டுதல் குழுவுக்கு முழுமையான அதிகாரம் வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

வழிகாட்டுதல் குழுவை பொறுத்த வரை ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.அதன்படி,குழுவில் உள்ள 11 பேரில் 6 பேர் இபிஎஸ் தரப்பும்,5 பேர் ஓபிஎஸ் தரப்பிலும் உள்ளனர்.இந்த நிலையில்,இந்த ஓபிஎஸ் தரப்பில் 5 பேரில் ஒருவரும்,சற்று முன்னர் சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுமான மாணிக்கம், பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

மயக்கம் போட்ட பெண்…ஆவேசத்துடன் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்த அண்ணாமலை, தமிழிசை!

மயக்கம் போட்ட பெண்…ஆவேசத்துடன் காவல்துறையிடம் வாக்குவாதம் செய்த அண்ணாமலை, தமிழிசை!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…

1 hour ago

விசில் போடு! சென்னை – மும்பை போட்டியை பார்க்க ரெடியா? டிக்கெட் விற்பனை அப்டேட் இதோ!

சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…

2 hours ago

“பாஜகவின் அடியாள் ED…அதைவச்சு பழிவாங்குறாங்க”அமைச்சர் ரகுபதி காட்டம்!

சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…

3 hours ago

விஜய் வர்மாவுடன் காதல் முறிவா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா?

சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…

3 hours ago

“திருமா எங்களோடு போராட வேண்டும்!” பாஜக எம்எல்ஏ பகிரங்க அழைப்பு!

சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர்…

4 hours ago

“ஒற்றுமையாகதான் இருக்கோம் யாரும் பிரிக்க முடியாது”.. செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இபிஎஸ் பதில்!

சென்னை : அத்திக்கடவு திட்டம் வெற்றிபெற்றதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்றபோது அதில் முன்னாள் அமைச்சர்…

4 hours ago