#Breaking:”அதிமுகவை வழிகாட்டு குழுதான் வழிநடத்த வேண்டும்” – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்!

சென்னை:அதிமுகவை வழிகாட்டு குழுதான் வழிநடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கினைப்பளார் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் இன்று காலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மட்டுமல்லாமல் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள்,தலைமைக் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இக்கூட்டத்தில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் செயற்குழு கூட்டம்,சசிகலா விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுவதாக கூறப்படுகிறது.மேலும்,டிசம்பர் மாதத்தில் செயற்குழு கூட்டத்தை நடத்த அதிமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
இதனைத் தொடர்ந்து,அதிமுகவில் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை 11- லிருந்து 18 ஆக விரிவுப்படுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது.மேலும்,வழிகாட்டுதல் குழுவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பு வலியுறுத்தியதாக கூறப்பட்டது.
இந்நிலையில்,அதிமுகவை வழிகாட்டு குழுதான் வழிநடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார். வழிகாட்டுதல் குழுவுக்கு முழுமையான அதிகாரம் வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வழிகாட்டுதல் குழுவை பொறுத்த வரை ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.அதன்படி,குழுவில் உள்ள 11 பேரில் 6 பேர் இபிஎஸ் தரப்பும்,5 பேர் ஓபிஎஸ் தரப்பிலும் உள்ளனர்.இந்த நிலையில்,இந்த ஓபிஎஸ் தரப்பில் 5 பேரில் ஒருவரும்,சற்று முன்னர் சோழவந்தான் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுமான மாணிக்கம், பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழ்நாடு பட்ஜெட் விவாதம் முதல்… பாகிஸ்தான் குறித்து பிரதமர் மோடி கருத்து வரை.!
March 17, 2025
9 மாத விண்வெளி வாழ்க்கை…பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸின் உடல்நலத்திற்கு பாதிப்பு இருக்குமா?
March 17, 2025