எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து வணங்கி வரவேற்ற முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.!
அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளார். அவரை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சால்வை அணிவித்து வரவேற்றார்.
எடப்பாடி பழனிசாமியை வரவேற்க்கையில், முன்னால அமைச்சர் செல்லூர் ராஜு சால்வை அணிவித்து அவரது காலில் விழுந்து வணங்கினார். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் உடன் இருந்தனர்.
கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி அன்று தான் மதுரையில் அதிமுக சார்பில்பிரமாண்ட மாநாடு ஒன்று நடைபெற்று முடிந்தது. அதனை தொடர்ந்து தான் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் இபிஎஸ் விமானம் மூலம் சென்னை புறப்பட உள்ளார்.
முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் , தன்னைவிட வயது குறைந்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து வணங்கியது பேசுபொருளாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.