திமுக vs அதிமுக தான்.. பாஜக ஒண்ணுமேயில்லை.. எஸ்.பி.வேலுமணி அதிரடி.!

Election2024 : கோவையில் போட்டி திமுகவுக்கும் அதிமுகவுக்கும் தான் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம் செய்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாத காலதிற்குள் காலஅவகாசம் உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வென்ற தொகுதியான கோவையில் இந்த முறை திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்படாமல் திமுகவே நேரடியாக களமிறங்கியதற்கு காரணம் என்னவென்று பலரும் யோசிக்கவே, தாடாலடியாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் பாஜக சார்பில் போட்டியிடுவதாக அறிவித்தார். அதே நேரத்தில் கோவையில் அதிமுகவும் தங்களது வேட்பாளரை நேரடியாக களம் இறக்கியுள்ளது.
திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் என்பவர் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதனால் கோவை தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது.
கோவையில் அதிமுக வேட்பாளர் அறிமுக பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். அப்போது அவர் பேசுகையில், எப்போதுமே திமுக, அதிமுங்க இடையே தான் போட்டி என்று கூறினார்.
மேலும், அண்ணாமலை கடந்த முறை போட்டியிட்ட தொகுதி கரூர். அது தான் அவருக்கு சொந்த மாவட்டம். ஆனால், அதனை விட்டு தற்போது கோவையில் களமிறங்குகிறார். அவர்களிடம் என்ன வாக்கு சதவீதம் இருக்கிறது? கடந்த முறை நான்கு சதவீத வாக்கு பெற்றுள்ளனர். இந்த முறை கூடுதலாக 5% அல்லது 6% கொடுத்தாலும் 10 சதவீதம் வாக்கு தான் கிடைக்கும் அது வெற்றி பெற சாத்தியமா.?
களத்தில் இங்கு யார் இருக்கிறார்கள்.? பாஜக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு கோவையில் ஓட்டு இருக்கிறதா.? காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஓட்டு இருக்கிறதா? தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அவர்களுக்கு ஓட்டு இருக்கிறதா? எதுவுமே இல்லை. கோவை அதிமுக கோட்டை.
உலகத்தில் 7வது பெரிய கட்சி, இந்தியாவிலேயே மிகப்பெரிய கட்சி அதிமுக. எம்ஜிஆர் தொடங்கிய போது 17 லட்சம் உறுப்பினர்கள் இங்கு இருந்தார்கள். அடுத்து ஜெயிலலிதா அதனை 1.5 கோடி உறுப்பினர்களாக மாற்றினார்கள். தற்போது எடப்பாடி பழனிச்சாமி 2 கோடி தொண்டர்களாக மாற்றி உள்ளார். நமக்கு பிறகு தான் திமுகவே. தற்போதுள்ள whatsapp , சமூக வலைதள செய்திகளை வைத்துக்கொண்டு களநிலவரத்தை ஆராய முடியாது. களத்தில் என்றுமே திமுக அதிமுக இடையில் தான் போட்டி என முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஷமி விளையாடிய விதம் என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை!” கங்குலி ஓபன் டாக்
February 21, 2025