தீர்ப்புக்கு பின் முக்கிய ஆலோசனை.! முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த பொன்முடி.!
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பில் இருந்த பொன்முடி மீது கடந்த 2011ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையானது
வழக்கு பதிவு செய்து இருந்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
முன்னதாக விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி நிரபராதி என தீர்ப்பளித்து இருந்த நிலையில், நேற்று அந்த தீர்ப்பை ரத்து செய்து பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீதான சொத்துக் குறிப்பு வழக்கில் அவர்கள் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர்களுக்கு தலா மூன்று வருடம் சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. இதனை தொடர்ந்து அவரது அமைச்சர் பதவி மற்றும் எம்எல்ஏ பதவி விலகும் சூழல் உருவானது.
அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பு ஆளுநர் ஒப்புதல்..!
தற்போதும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொறுப்பானது அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் 30 நாட்களுக்குள் விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று கால அவகாசம் செய்யப்பட்டுள்ளது. அதனை மீறினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் பொன்மொழி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பானது நிகழ்ந்துள்ளது. சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின் போது முக்கிய விவாகரங்கள் குறித்து, குறிப்பாக மேல்முறையீடு குறித்துஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது. இந்த சந்திப்பு குறித்து முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.