முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார்..!
அமமுக துணை பொதுச்செயலாளர் பழனியப்பன் தி.மு.க.வில் இணைந்தார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பழனியப்பன் திமுகவில் இணைந்தார்.
ஜெயலலிதா ஆட்சியின்போது உயர்கல்வித் துறை அமைச்சராக பழனியப்பன் இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, பழனியப்பன் அமமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.