#BREAKING : முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக ஆட்சியின் போது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாக ரூ.90 கோடி அளவிற்கு சொத்து குவித்ததாகக் எழுந்த புகாரின் பேரில் இன்று காலை 6.30 மணி முதல் கே.சி.வீரமணியின் சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்
இதைத்தொடர்ந்து, சென்னை, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது. ஏற்கெனவே, முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர் , எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்த நிலையில், தற்போது கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் கே.சி.வீரமணி வீட்டின் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025