முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆதரவாளர்கள் 20 பேருக்கு முன்ஜாமீன்!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் 20 பேருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவு.
திமுக தொண்டரை தாக்கிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் 20 பேருக்கு நிபந்தையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு, சதீஷ்குமார் உள்ளிட்ட 20 பேருக்கு முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருநாவுக்கரசு வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திலும், மற்ற 19 பேர் பெருங்குளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த பிப் 19-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுகவைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக்கியதாக, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் பிப்.20-ம் தேதி ஜெயக்குமார் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதன்பின் நிபந்தனையுடன் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் 20 பேருக்கு நிபந்தையுடன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.