உதயநிதி ஸ்டாலின் நேற்று முளைத்த காளான்.! ஜெயக்குமார் கடும் விமர்சனம்.!
சென்னையில் ஏற்பட்ட கனமழை பெரு வெள்ளத்திற்கு நிவாரண உதவிக்காக மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு பேரிடர் நிவாரண நிதியை கேட்டு இருந்தது. இந்த சமயத்தில் பாஜக எம்பி ஒருவர் பேசுகையில், தமிழக அரசு நிவாரண நிதி கேட்டவுடன் கொடுப்பதற்கு மத்திய அரசு என்ன ஏடிஎம் இயந்திரமா என விமர்சித்தார்.
இதற்கு பதில் கூறும் வகையில் அமைச்சர் உதயநிதி பேசுகையில், நாங்கள் யாரும் அவர்கள் அப்பா வீட்டு சொத்தை கேட்கவில்லை. தமிழக மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தான் பேரிடர் நிவாரணையை கேட்கிறோம் என்று காட்டமாக விமர்சித்து இருந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இந்த விமர்சனம் பாஜகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பலைகளை உண்டாக்கியது.
உதயநிதி ஸ்டாலின் கேள்வியால் தான் நிர்மலா சீதாராமன் தூத்துக்குடி செல்கிறார் – வைகோ!
நேற்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்பு குறித்தும் மத்திய அரசின் நிவாரண நிதி அறிக்கை குறித்தும் கூறுகையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கும் கடும் எதிர்ப்பை தெரிவித்தார். அதில், உதயநிதி ஸ்டாலின் பேசும் பாஷை சரியாக இல்லை. அவர் பொறுப்புடன் பேச வேண்டும் என விமர்சித்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை. தற்போதும் கூறுகிறேன், மதிப்பிற்குரிய நீதியமைச்சர் நிர்வாக சீதாராமனின் மதிப்பிற்குரிய அப்பாவின் சொத்தை நாங்கள் கேட்கவில்லை. எங்கள் வரிப்பணத்தில் இருந்து தான் நிவாரண நிதியை கேட்கிறோம் என்று மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் தொடர்பாக இன்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளரிடம் பேசுகையில், தென்மாவட்டங்களில் வாய்க்கால் குளங்களை முறையாக தூர்வாரி இருந்தால் இவ்வளவு பெரிய உயிர் சேதம், பொருட்சேதம் ஹெலிகாப்டரில் வந்து சாப்பாடு போடும் நிலைமையும் வந்திருக்காது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான். அவருக்கு வாய் தொடுக்கு கொஞ்சம் அதிகம். அதனால், வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. பொறுப்பாக கருத்துக்களை கூற வேண்டும். ஒரு பக்குவம் இல்லாத அரசியல்வாதி உதயநிதி ஸ்டாலின். வாய் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்கிறார். அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்த உடன் தற்போது ‘பல்ட்டி’ அடிக்கிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.