மத்திய குற்றப்பிரிவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜர்!

Default Image

தொழிற்சாலையை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜர்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜரானார். ரூ.5 கோடி மதிப்புள்ள நில அபகரிப்பு வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற நிலையில், கையெழுத்திட ஜெயக்குமார் ஆஜரானார். இதனிடையே, சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார். இதனடிப்படையில், நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, கடந்த 11-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. காவல் நிலைத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜராகி கையெழுத்திட்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல், டீசல் விலை கூடிக்கொண்டே இருக்கிறது; இது குறித்து திமுக அரசு வாய் திறக்கவில்லை. கேஸ் சிலிண்டருக்கு மானியம் தருகிறோம் என்று சொன்ன திமுக அரசு அதனை தற்போது தர மறுக்கிறது. முதல்வர் துபாய் பயணம் அரசு முறை பயணமா அல்லது அரசர் முறை பயணமா? என கேள்வி எழுப்பினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்