சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு திடீர் நெஞ்சுவலி.!

முன்னாள் அதிமுக அமைச்சர் இந்திரகுமாரிக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை இன்று அறிவிக்கப்பட்ட நிலையில்,அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, 1991-96 காலகட்டத்தில்அதிமுக ஆட்சிக்காலத்தில்,முன்னாள் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த இந்திர குமாரி,காது கேளாதோர் பள்ளியும், ஊனமுற்றோர் பள்ளிகளையும் தொடங்குவதாகக் கூறிய தனது கணவர் பாபுவுக்கு அரசிடம் இருந்து ரூ.15.45 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளார்.
ஆனால்,அவ்வாறு பெறப்பட்ட நிதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தவிதமான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை. இதனையடுத்து,அரசின் நிதியை முறைகேடாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் இந்திரா குமாரி உள்ளிட்ட 3 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனையடுத்து,ஊழல் வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதேபோல,அவரது கணவர் பாபுவுக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ஐ.ஏ.எஸ்.அதிகாரி சண்முகத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இருந்த இந்திரகுமாரிக்கு சுவாச கோளாறு ஏற்பட்டதால் சிகிச்சையளிக்க முடிவு செய்யப்பட்டு,அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்திரகுமாரி தற்போது,திமுக இலக்கிய அணி செயலாளராகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025