அதிமுகவின் கரும்புள்ளி ஓபிஎஸ்.! அவருக்கு எந்த தகுதியும் இல்லை.! சி.வி.சண்முகம் ஆவேசம்.!
இரட்டை இல்லை சின்னம் முடங்குவதற்கு காரணமாக இருந்தவர் ஓபிஎஸ். அவர் அதிமுக வரலாற்றிற்கு ஓர் கரும்புள்ளி என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அதிமுக கட்சி தொடங்கி, நேற்றோடு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்று 51வது ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கிறது. இதனை ஒட்டி, அதிமுக கட்சியினர் பொன்விழா ஆண்டு நிறைவு என தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடி வருகின்றனர்.
அதிமுக இடைக்கால பொது செயலாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினர், அதிமுக தலைமை செயலகத்தில் எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தினர்.
விழுப்புரத்தில் நடைபெற்ற அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ அதிமுக வரலாற்றில் ஓ.பன்னீர்செல்வம் ஓர் கரும்புள்ளி.’ என விமர்சித்தார்.
மேலும் பேசுகையில், ‘ இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கு காரணமாக இருந்தது ஓபிஎஸ் தன. அப்படி இருக்க, அதிமுகவை பற்றி பேச தகுதி அவருக்கு இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் ஆன்மா ஓபிஎஸ்-ஐ மன்னிக்காது.’ என ஓபிஎஸ் மீது கடுமையான விமர்சனத்தை சிவி.சண்முகம் முன்வைத்தார்.