மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. தங்கவேல் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்.!

Published by
கெளதம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. தங்கவேல் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேலுக்கு, கடந்த 15 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதியானது. இதன் காரணமாக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார். கே.தங்கவேல், 2011 முதல் 2016 வரை திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

இவரது மறைவுக்கு பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. கே.தங்கவேல் அவர்கள் மறைவெய்தினார் என்ற வேதனைச் செய்தி கேட்டு துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து தொழிலாளியாக தொழிற்சங்கத் தலைவராக உயர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். ஒன்றுபட்ட கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி செயலாளராக 11 ஆண்டுகள் செயல்பட்ட அவர், மாநிலச் செயற்குழு உறுப்பினராவர். 2011-16ல் திருப்பூர் (தெற்கு) சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற அவர் – மக்களின் கோரிக்கைகள் நிறைவேற சட்டமன்றத்தில் குரல் கொடுத்தவர். தொழிலாளர்களுக்காக திருப்பூரில் அவர் நடத்திய “127 நாட்கள்” நீண்டதொரு போராட்டம், இன்றும் குறிப்பிடத்தக்க தொழிலாளர் உரிமைப் போராட்டமாக இருக்கிறது.

அடித்தட்டு மக்களை குறிப்பாக, தொழிலாளர் வர்க்கத்தைப் பாதிக்கும் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்த தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் சிந்தனையாளரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இழந்து தவிக்கிறது. அவரை இழந்து துயரத்தில் இருக்கும் அவரது துணைவியார் திருமதி சாந்தி அவர்களுக்கும் மற்றும் அவரது மகள்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Published by
கெளதம்

Recent Posts

தொடர்ந்த சரியும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு ரூ.240 குறைவு!

தொடர்ந்த சரியும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு ரூ.240 குறைவு!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…

29 minutes ago

சென்னை: பாதியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் – பயணிகள் தவிப்பு.!

சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…

35 minutes ago

தமிழகத்தில் சனிக்கிழமை (21/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…

51 minutes ago

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இந்திய மகளிர் அணி! 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் அசத்தல்!

நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி  3 டி0 போட்டிகள், 3…

1 hour ago

ஜெய்ப்பூரில் பயங்கர தீ விபத்து! 5 பேர் உடல் கருகி பலி!

ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை டிரக் மற்ற…

2 hours ago

Live : வானிலை நிலவரம் முதல்…ராகுல் காந்தி மீது வழக்கு பதிவு வரை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

2 hours ago