முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவருமான குமாரதாஸ் அவர்கள் சற்று முன் மாரடைப்பால் காலமானார்.
கன்னியாகுமாரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் இருந்து 1984,1991,1996 மற்றும் 2001 என்று தொடர்ந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர குமாரதாஸ். ஆரம்ப கால அரசியலில் ஜனதா தளம் கட்சியில் இருந்து இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார். பிளவு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். இவர் 2002 ம் ஆண்டு தமிழ் மாநில காமராஜர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை உருவாக்கினார். பின்னர், அக்கட்சியை கலைத்து விட்டு காங்கிரசில் ஜி.கே.வாசனின் ஆதரவாளராக இருந்து வந்தார். 2014 ம் ஆண்டு மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் துவங்கியதில் இருந்து அக்கட்சியின் மாநில துணை தலைவராக இருந்து வந்தவர் குமாதாஸ்.
கடந்த சில நாட்களாக உடல்நலம் சரி இல்லாமல் ஓய்வில் இருந்த நிலையில், இன்று மாலை மாரடைப்பால்அவரது உயிர் பிரிந்தது.
வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…
புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…
சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல்…