#BREAKING : நீதிபதிகள் குறித்து அவதூறாக வீடியோ ! முன்னாள் நீதிபதி கர்ணன் கைது
நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் நீதிபதி கர்ணன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சக நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாமாக முன்வந்து தொடர்ந்தது உச்ச நீதிமன்றம்.இந்த வழக்கின் விசாரணையில் கொல்கத்தாவில் உள்ள சிறையில் 6 மாதங்கள் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் நீதிபதி கர்ணன் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிபதிகள் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட வழக்கில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.