நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டது வரலாற்று முக்கிய நிகழ்வு.! முன்னாள் நீதிபதி சந்த்ரு பேச்சு.!
நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டது வரலாற்று முக்கிய நிகழ்வு என முன்னாள் நீதிபதி சந்த்ரு பேசியுள்ளார்.
2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை கைப்பற்றிய ஆண்டில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி கடந்த கால ஆட்சியில் சென்னை மேம்பாலம் கட்டுமானத்தில் ஊழல் நடத்தியதாக கூறி அவரை கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஜூன் 30 நள்ளிரவில் காவல்துறையினர் கைது செய்யும் போது ஐயோ என்னை கொல்றாங்க எனும் கலைஞர் குரல் தான் மறுநாள் முழுக்க தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.
இந்த கைது நடவடிக்கை பற்றி நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் முன்னாள் நீதிபதி சந்துரு தனது கருத்தை தெரிவித்துள்ளார். சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் ‘நள்ளிரவில் கலைஞர் கைது’ எனும் புத்தகத்தை வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது.
அந்த விழாவில் பேசிய நீதிபதி சந்துரு, 2001ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு. கலைஞரின் நூற்றாண்டில் ஒரு வரலாற்று மைல்கல். அதனை மறந்து விட முடியாது என குறிப்பிட்டு பேசினார்.