துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திடீர் சந்திப்பு

முன்னாள் அமைச்சர் மணிகண்டன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளார்.
நேற்று அதிமுக செயற்குழுக்கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என நீண்ட நாட்களாக கேள்வி வந்த நிலையில் ,அக்டோபர் 7-ஆம் தேதி அதிமுகவின் முதமைச்சர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.இதனால் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தற்போது நடைபெற்று வரும் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025