முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்.!

டெல்லியில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்.
கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை என்பவர், சமீபத்தில் திடீரென அவரது பணியில் இருந்து விலகி, சில மாதங்களுக்கு விவசாயத்தில் களமிறங்க உள்ளேன் என தெரிவித்தார். இதனிடையே, ரஜினிகாந்துக்கு ஆதரவாக அவர் பேசிவந்ததால் ரஜினி தொடங்க உள்ள கட்சியில் அவர் இணைய உள்ளதாக கூறப்பட்டது.
இனையடுத்து, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை, டெல்லியில் உள்ள பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் இன்று காலை 11 மணிக்கு பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், டெல்லியில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். அப்போது, தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் மேலிட பொறுப்பாளர் முரளிதர ராவ் இருந்தனர். பாரதிய ஜனதா கட்சியை மேலும் வலுப்படுத்த என்னாலான முயற்ச்சியை செய்வேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025