நிதிச்சுமை ஏற்படுத்தி சென்ற முன்னாள் நிதியமைச்சர் உண்மை தன்மை தெரியாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார் – அமைச்சர் சுப்பிரமணியன்

நிதி சுமையை ஏற்படுத்தி சென்ற முன்னாள் நிதியமைச்சர் உண்மைத் தன்மை தெரியாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று அஇஅதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட 487 கோடி ரூபாயை திமுக குறைத்து ஒதுக்கியதாலேயே எக்ஸ்ரே முடிவுகளை வெள்ளைத்தாளில் அச்சிட்டு வழங்கும் நிலை அரசு மருத்துவமனைகளுக்கு ஏற்பட்டுள்ளது என்றும், முதல்வர் இதற்கு தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
மேலும், தூத்துக்குடி பாவட்டம், கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஊடுகதிர், அதாவது எக்ஸ்ரே எடுத்துக் கொண்ட மக்களுக்கு அதற்கான முடிவுகள் வெள்ளைத்தாளில் விநியோகிக்கப்படுகின்றன என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் பதிலளித்திருந்தார். அவர் கூறுகையில், அதிமுக ஆட்சியில் நியமிக்கப்படாத செவிலியர்களுக்கு எப்படி சம்பள கொடுத்தார்கள்? மினி கிளினிக்கிற்காக செவிலியரை பணியமர்த்தாமலேயே ரூ.144 கோடி ஒதுக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், எந்த விதத்திலும் மருத்துவத்திற்கு குறைந்த நிதி ஒதுக்கவில்லை என்றும், நிதி சுமையை ஏற்படுத்தி சென்ற முன்னாள் நிதியமைச்சர் உண்மைத் தன்மை தெரியாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
தெலுங்கானாவில் பயங்கரம் : சுரங்கத்தில் சிக்கிய 8 தொழிலார்கள்.! 48 மணிநேரமாக தொடரும் மீட்புப்பணிகள்….
February 24, 2025
வாரத்தின் முதல் நாளே உச்சம்… இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்.!
February 24, 2025