தஞ்சையில் அண்மையில் மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் உபயதுல்லா வீட்டிற்கு நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளார்.
கடந்த 19ஆம் தேதி தஞ்சையில் திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 84. அவர் மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர் . திமுக சார்பில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி இருந்தனர்.
நேரில் ஆறுதல் : இந்நிலையில், இன்று மற்றும் நாளை 2 நாள் பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் சென்றுள்ளார். விமானம் மூலம் திருச்சி வந்த முதல்வர் அங்கிருந்து திருவாரூர் செல்லும் வழியிவ் தஞ்சையில் மேரிஷ்கர்னார் பகுதியில் கல்லுக்குளம் சாலையில் உள்ள மறைந்த உபயதுல்லா வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். அங்கு, உபயதுல்லா குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறியுள்ளார்.
திருவாரூர் பயணம் : இதனை அடுத்து, திருவாரூரில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகம், மணிமண்டபம் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, நாளை திருவாரூரில் கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண நிகழ்வில் முதலவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,13-01-2025…
மதுரை : பொங்கல் திருநாள் வந்துவிட்டாளே மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு திருவிழாவால் விழாக்கோலம் பூண்டுவிடும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண…
ஆந்திரப் பிரதேசம்: திருமலை லட்டு கவுண்டர்களில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் அச்சமடைந்து ஓடினர். பின்னர் சம்பவ இடத்திற்கு…
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக பற்றி எரிந்து வரும் காட்டுத் தீக்கு பலியானோரின் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.…
திருவனந்தபுரம் : மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள்…
சென்னை: 2025 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள் பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர்…