முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கு விசாரணை வருகின்ற நவம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஏப்ரல் மாதம் பெண் எஸ்.பி புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
பின்னர், 400 பக்க கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்தனர். சமீபத்தில் தன் மீதான வழக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரிக்கத் தடை விதிக்கக் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடிக்க விழுப்புரம் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணை தற்போது விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி கண்ணன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நவம்பர் 8-ஆம் தேதி முன்னாள் டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், முன்னாள் எஸ்.பி கண்ணன் கட்டாயம் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 29-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நவம்பர் 1-ம் தேதி( இன்று) முன்னாள் சிறப்பு டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…