கமலாத்தாள் பாட்டி நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரணம் – முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப்
கமலாத்தாள் பாட்டியை பாராட்டி ட்வீட் செய்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப்.
கோவை அருகே உள்ள ஆலாந்துறை வடிவேலம்பாளையத்தை சேர்ந்தவர் கமலாத்தாள் என்ற 85 வயது மூதாட்டி. இவர், தனது தள்ளாடும் வயதிலும் ரூ.1 க்கு இட்லி விற்பனை செய்வதால், இவரை இட்லி பாட்டி என்று அழைப்பர்.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக நாடே நிலைகுலைந்து இருக்கும் சூழலில் பம்பரமாக இயங்கிக்கொண்டிருக்கிறார் இட்லி பாட்டி கமலாத்தாள். ஊரடங்கு உள்ள நிலையிலும் வெளியூரில் இருந்து வந்தவர்கள் மற்றும் உள்ளூரில் இருப்பவர்கள் என தினமும் 400 பேருக்கு மேல் உணவளித்து வருகின்றார்.
இதனையடுத்து, இந்த உதவும் குணம் கொண்ட மூதாட்டியை பாராட்டி, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘கமலாத்தாள் பாட்டியின் பணி மகத்தானது. ஊரடங்கிலும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பது மிக உன்னதமான செயல். நமக்கெல்லாம் இது ஒரு முன்னுதாரணம்’ என பதிவிட்டுள்ளார்.