காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திக்கிறார் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி..!

Congress Leader Sonia Gandhi

திமுக மகளிர் அணி சார்பில் இன்று (அக். 14) சென்னையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறும் என்று தி.மு.க. துணைப்பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி அறிவித்திருந்தார்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்துவது உள்ளிட்ட பெண்ணுரிமை தொடர்பான கருத்துரையாடலை முன்னெடுப்பதை காலத்தின் தேவையாகக் கருதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மகளிர் அணி சார்பில் இன்று சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ‘மகளிர் உரிமை மாநாடு’ பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

சென்னையில் இன்று மகளிர் உரிமை மாநாடு! 5 ஆண்டுகளுக்கு பின் தமிழகம் வந்த சோனியா காந்தி!

சென்னை வருகை தந்த காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை விமான நிலையத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். 

இந்த  நிலையில், கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தங்கியுள்ளனர். இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள், எம்பிக்களுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொள்கிறார்.  

இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், அமைப்பு ரீதியாக வலுப்படுத்துவது குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் பணிகள், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்