கொரோனா பாதிப்பால் உயிரிழந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி.எஸ்.சிங்காரவடிவேல்!

தஞ்சை:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. எஸ்.சிங்காரவடிவேல் இன்று காலமானார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட கொரோனா பரவல்,தற்போது குறைந்து வருகின்றது.இதற்கிடையில்,அரசியல்,சினிமா பிரபலங்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
அந்த வகையில்,கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி எஸ்.சிங்காரவடிவேல் அவர்கள்,தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில்,அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து,முன்னாள் எம்.பி எஸ்.சிங்காரவடிவேல் அவர்களின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள்,காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எஸ்.சிங்காரவடிவேல் அவர்கள் கடந்த 1984 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் தஞ்சாவூர் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025