முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு. சஞ்ஜய் ராமசுவாமி பாஜகவில் இணைந்தார்.
முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு. சஞ்ஜய் ராமசுவாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் பஜவில் இணைந்தார்.
இதுகுறித்து அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,’பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, மூன்று தலைமுறை நீதித்துறை அனுபவமும் 30 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான திரு சஞ்சய் ராமசுவாமி அவர்கள் தன்னை தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார்.
இவரது பாட்டனார் ஜஸ்டிஸ் திரு கே வீராசுவாமி அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். இவரது தந்தையார் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள திரு சஞ்சய் ராமசுவாமி அவர்கள், காங்கிரஸ் கட்சியின் சார்பாக 1991 ஆம் ஆண்டு விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது! திரு சஞ்சய் ராமசுவாமி அவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.’ என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…