பாஜகவில் இணைந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு. சஞ்ஜய் ராமசுவாமி பாஜகவில் இணைந்தார்.
முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு. சஞ்ஜய் ராமசுவாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில் பஜவில் இணைந்தார்.
இதுகுறித்து அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,’பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, மூன்று தலைமுறை நீதித்துறை அனுபவமும் 30 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான திரு சஞ்சய் ராமசுவாமி அவர்கள் தன்னை தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார்.
இவரது பாட்டனார் ஜஸ்டிஸ் திரு கே வீராசுவாமி அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றினார். இவரது தந்தையார் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள திரு சஞ்சய் ராமசுவாமி அவர்கள், காங்கிரஸ் கட்சியின் சார்பாக 1991 ஆம் ஆண்டு விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது! திரு சஞ்சய் ராமசுவாமி அவர்களின் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.’ என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கர்மவீரர் காலத்துக் காங்கிரஸ் குடும்பம் எல்லாம், கடமை வீரர் @narendramodi அவர்களின் பின்னால் அணி சேருகின்றனர்.
விருதுநகரின் புகழ்பெற்ற நீதியரசர் குடும்பத்தின், முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு. சஞ்ஜய் ராமசுவாமி அவர்கள், @BJP4TamilNadu வில் இணைந்துள்ளார்.
1/2 pic.twitter.com/uAWGdNBKrX
— K.Annamalai (@annamalai_k) July 30, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024![Today Live 19122024](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Today-Live-19122024.webp)
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024![arudra darisanam (1)](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/arudra-darisanam-1.webp)
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024![Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Congress-MP-Rahul-Gandhi-BJP-MP-Pratap-Chandra-Sarangi-1.webp)
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024![Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/12/Congress-MP-Rahul-Gandhi-BJP-MP-Pratap-Chandra-Sarangi.webp)