மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.16.37 கோடி சொத்து! வங்கியில் ரூ.10 கோடி இருப்பு உள்ளது! வருமான வரித்துறை
ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரிய வழக்கின் விசாரணையை ஜுன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தி வழக்கு தொடரப்பட்டது .அந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.அதில்2016-2017 ஆம் ஆண்டுக்கான கணக்குப்படி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.16.37 கோடி சொத்துகள் உள்ளது. 2016-2017ஆம் ஆண்டுக்கான கணக்குப்படி ஜெயலலிதாவுக்கு வங்கியில் ரூ.10 கோடி இருப்பு உள்ளது.
அதேபோல் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் தோட்ட வீடு உள்பட 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. 1990-91 முதல் 2011-12 வரை ஜெயலலிதாவுக்கு ரூ10.12 கோடி செல்வ வரி பாக்கி உள்ளது.
2005-06 முதல் 2011-12 வரை ரூ.6.62 கோடி ஜெயலலிதாவுக்கு வருமான வரி பாக்கி உள்ளது என்று அறிக்கையில் தகவல் தெரிவித்த்தது.இதன் பின் வழக்கு விசாரணையை ஜுன் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.