இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், படகியுமான பவதாரிணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இலங்கையில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சிகிச்சை பலனின்றி ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பவதாரணியின் உடல், தேனியில் இருக்கும் இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது உடல் அருகே இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இதனையடுத்து, அஞ்சலிக்காக தேனி மாவட்டத்தில் அவருடைய உடலும் வைக்கப்பட்டு இருக்கிறது.
மகள் பவதாரிணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய இளையராஜா!
எனவே, மக்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில், முன்னாள் முதல்வர் ஒ பன்னீர் செல்வம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். செலுத்திய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்து உருக்கமாக பேசினார். இது குறித்து பேசிய அவர் ” இளையராஜாவின் அன்பு மகள் பவதாரிணி மறைவு இசை துறையை சேர்ந்தவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் பெரிய இழப்பு.
தன்னுடைய இனிமையான குரலில் உலாவந்த பவதாரிணி மறைவு என்னுடைய தேனி மாவட்டத்திற்கு பெரிய இழப்பாகும் என்பதனை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய மறைவால் வாடும் அவருடைய குடும்பத்திற்கு நான் இந்த நேரத்தில் ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன். பவதாரிணி ஆன்மா சாந்தியாடவேண்டும்” எனவும் ஓ.பன்னீர் செல்வம் உருக்கமாக பேசியுள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…