முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து வழக்கு….! வருமானத்துறை மற்றும் அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து விவரம் குறித்து, வருமானவரித்துறைக்கும், அமலாக்கத்துறைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பெயரில் வெளிநாட்டில் சொத்துக்கள் ஏதேனும் உள்ளதா ? என வருமானவரித்துறையும், அமலாக்கத்துறையும் பதிலளிக்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகிகளை நியமிக்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.