முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே சிறையில் இருந்தவர்…! நாங்கள் எதற்கும் தயாராகத்தான் இருந்தோம் – எஸ்.பி.வேலுமணி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே சிறையில் இருந்தார். எனவே நாங்கள் எதற்கும் தயாராக தான் இருந்தோம் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கும் சூழல் உருவாகியுள்ளது. தன் மீது எந்த வழக்கை போட்டாலும் சந்திக்க தயாராக இருப்பதாகவும், ஆனால், தொண்டர்கள், பொறுப்பாளர்கள் மீது வழக்கு போட்டால் விடமாட்டோம் என தெரிவித்தார். மேலும், ஊழல் குற்றசாட்டில் வழக்கு பதியும் போது, முதலில் தன் மீது தான் வழக்கு பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஏனென்றால், எடப்பாடியார் தலைமையில் இந்த ஆட்சி நடைபெற 4 வருடங்கள் முக்கியமான காரணமாக நான் இருந்தேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே சிறையில் இருந்தார். எனவே நாங்கள் எதற்கும் தயாராக தான் இருந்தோம் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025