வசந்தகுமார் உடலுக்கு பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அஞ்சலி.!
காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உடலுக்கு பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் நேரில் அஞ்சலி
கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.பி வசந்தகுமார் நேற்று முன்தினம் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வசந்தகுமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்தனர். மறைந்த வசந்தகுமாரின் உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரத்துக்கு கொண்டு வரப்பட்டு அவரது இல்லத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் உடலுக்கு பாஜக முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.