Mr.திருமாவளவன் முதல் அண்ணன் திருமாவளவன் வரை… காயத்ரி ரகுராமின் ‘அம்பேத்கர் திடல்’ விசிட்.!
முன்னாள் பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம், விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்துள்ளார். மேலும், அவரை அண்ணன் திருமாவளவன் என டிவிட்டரில் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
பாஜகவில் காயத்ரி ரகுராம் முக்கிய அங்கம் வகித்தபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் எம்.பி திருமாவளவன் அவர்களை மேடைக்கு மேடை வசைபாடி கொண்டிருந்தார். தற்போது அவர் பாஜகவை விட்டு விலகி இருக்கும் நிலையில் திருவமாவளவனை நேரில் சந்தித்து அண்ணன் திருமாவளவன் என குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.
சவால் : இந்துக்களை பற்றி அவதூறாக திருமாவளவன் பேசியதாக குற்றம் சாட்டி, அவரை சென்னை மெரினாவுக்கு தன்னுடன் மேடை பேச்சுக்கு வருமாறு பகிரங்க அழைப்பு விடுத்தார் அப்போதைய பாஜக முக்கிய நிர்வாகி காயத்ரி ரகுராம். அதற்கடுத்து, ஒரு நேர்காணலில் நடிகைகளை பற்றி அவதூறாக திருமாவளவன் பேசியாக குற்றம் சாட்டி அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார் காயத்ரி ரகுராம்.
Mr.திருமாவளவன் : அந்த மேடையில் பேசுகையில் தான், என்ன Mr.திருமாவளவன், நடிகைகள் என்றால் உங்களுக்கு எப்படி தெரிகிறது என்ற தொனியில் பேசியிருப்பார். அது அப்போதைய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகு, பாஜக மாநில தலைமை உடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக பாஜகவில் இருந்து விலகி, தமிழக பாஜக தலைமைக்கு எதிரான நிலைப்பாட்டில் தற்போது இருக்கிறார் காயத்ரி ரகுராம்.
அண்ணன் திருமாவளவன் : இந்நிலையில், நேற்று திடீரென சென்னை அம்பேத்கர் திடலில் விசிக தலைவர் எம்.பி திருமாவளவனை நேரில் சந்தித்துள்ளளார் காயத்ரி ரகுராம். அதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிடுகையில் , ‘எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவிய வி.சி.க. தலைவர், எம்.பி., அண்ணா திரு.தொல் திருமாவளவன் அவர்களுக்கும், வி.சி.க.வுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி. என குறிப்பிட்டுள்ளார். மேலும் இது அரசியல் நிமித்தமான சந்திப்பு மட்டுமே எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது ????
வி.சி.க. தலைவர், எம்.பி., அண்ணா திரு.தொல் திருமாவளவன் அவர்களுக்கும், வி.சி.க.வுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி.மாரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு ????
.@thirumaofficial pic.twitter.com/3dDB01sxGF
— Gayathri Raguramm ???????? (@Gayatri_Raguram) February 21, 2023
அரசியல் மாற்றம் : சில ஆண்டுகளுக்கு முன்னனர் Mr.திருமாவளவன் என குறிப்பிட்ட காயத்ரி ரகுராம் தற்போது அண்ணன் திருமாவளவன் என குறிப்பிட தொடங்கியுள்ளார். அரசியலில், காலம் , சூழ்நிலை எப்படி வேண்டுமானாலும் மாறும் என்பதற்கு இந்த மாற்றமும் ஓர் உதாரணம் என்றே கூற வேண்டும்.
திருமாவளவன் டிவீட் : காயத்ரி ரகுராம் உடனான சந்திப்பு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், அம்பேத்கர் திடலுக்கு வந்த காயத்ரி ரகுராம் அவர்களுக்கு ‘உலக வரலாற்றில் பெண்கள்’ எனும் நூலைப் பரிசாக அளித்தேன். அன்னை சாவித்திரிபாய் ஃபுலே அவர்களின் சகிப்புத் தன்மையும், ஜெயலலிதா அம்மையாரின் போர்க் குணமும் பொதுவாழ்வில் ஒவ்வொரு பெண்மணிக்கும் தேவை என்பதைச் சொல்லி அவரை வாழ்த்தினேன். என அதில் குறிப்பிட்டுள்ளார்.
அம்பேத்கர் திடலுக்கு வந்த @Gayatri_Raguram அவர்களுக்கு ‘உலக வரலாற்றில் பெண்கள்’ எனும் நூலைப் பரிசாக அளித்தேன். அன்னை சாவித்திரிபாய் ஃபுலே அவர்களின் சகிப்புத் தன்மையும் ஜெயலலிதா அம்மையாரின் போர்க் குணமும் பொதுவாழ்வில் ஒவ்வொரு பெண்மணிக்கும் தேவை என்பதைச் சொல்லி அவரை வாழ்த்தினேன். pic.twitter.com/K0GIYwLIWT
— Thol. Thirumavalavan (@thirumaofficial) February 21, 2023