“விஜய் முன்னிலையில் தவெகவில் இணைய உள்ளேன்” – பாஜக முன்னாள் நிர்வாகி ரஞ்சனா.!
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைக்கும் எனவும், விஜய் தமிழக மக்களுக்கு நல்லது செய்வார் என்று முன்னாள் பாஜக ரஞ்சனா நாச்சியார் தெரிவித்துள்ளார்.

சென்னை : மும்மொழிக் கொள்கை மற்றும் திராவிடம் மீதான பாஜகவின் எதிர்ப்பின் காரணமாக கட்சியில் இருந்து விலகுவதாக நேற்றைய தினம் பாஜக மாநில நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் அறிவித்திருந்தார். இந்த நிலையில், நேற்று பாஜகவிலிருந்து விலகிய நடிகையும், மாநில கலை, பண்பாட்டுப் பிரிவு செயலாளருமான ரஞ்சனா நாச்சியார் தவெகவில் இணைவதாக அறிவித்துள்ளார்.
பாஜக மாநில பொறுப்பில் இருந்து விலகிய ரஞ்சனா நாச்சியார் தவெகவில் இணைவதாக தகவல் வெளியாகிய நிலையில், இப்போது மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் தவெகவின் 2ஆம் ஆண்டு விழா அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சனா நாச்சியார், “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைக்கும் எனவும், விஜய் தமிழக மக்களுக்கு நல்லது செய்வார் என்றும் நம்பிக்கை”தெரிவித்துள்ளார்.
தற்போது, சென்னை மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் #GETOUT என்கிற கையெழுத்து இயக்கத்தை விஜய் தொடங்கி வைத்தார். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக இந்த கையெழுத்து இயக்கத்தை தவெக கையில் எடுத்துள்ளது.