இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
மக்களவை தேர்தலுக்கு அ.தி.மு.க கூட்டணியில் அ.தி.மு.க 20 தொகுதிகளிலும் , பா.ஜ.க. 5 தொகுதிகளிலும் , பா.ம.க. 7 தொகுதிகளிலும் , தே.மு.தி.க. 4 தொகுதிகளிலும் , த.மா.கா, புதிய தமிழகம், மற்றும் புதிய நீதிக்கட்சி,என்.ஆர்.காங்கிரஸ் தலா 1 தொகுதிகளிலும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் -10, மதிமுக – 1 மக்களவை, 1 மாநிலங்களவை, விசிக – 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 2, இந்திய கம்யூனிஸ்ட் – 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி -1, ஐஜேகே – 1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார் ராஜகண்ணப்பன்.ராஜகண்ணப்பன் 1996 வரை ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் .அதன்பிறகு மக்கள் தமிழ்தேசம் என்ற கட்சியை துவங்கி 2001ல் திமுகவுக்கு ஆதரவு கொடுத்தார்.2001ல் திமுக கூட்டணியில் கண்ணப்பன் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட இளையாங்குடியில் அவரே களமிறங்கினார்.
பின்னர் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
இதன் பின்னர் அவர் கூறுகையில்,அதிமுகவில் உட்கட்சிப்பூசல் நிறைய உள்ளது. தென் மாவட்டம் என்பது திராவிட இயக்க பூமி. அங்கு பாஜகவுக்கு இடம் ஒதுக்குகிறார்கள். நோட்டாவுக்கு கீழ் ஓட்டுவாங்கும் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்குகிறார்கள். தொகுதிகள் தொடர்பாக விவாதம் எதுவும் கிடையாது.தங்கமணி, வேலுமணி தான் முடிவு செய்கிறார்கள்
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…