பாஜகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள்.!

BJP - AIADMK

அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் எஞ்சிய நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தில் கட்சிகள் இடையே கூட்டணி நிலைப்பாடு குறித்த பேச்சு வார்த்தை தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்து அடுத்து வந்த 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தல்களை அதிமுக – பாஜக கூட்டணியாக சேர்ந்து எதிர்கொண்டனர்.

வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன், இனி பாஜக – அதிமுக கூட்டணி இல்லை என்றும் அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இதனை தொடர்ந்து, அதிமுக ஆதரவாளர்கள் அவ்வப்போது, மற்ற கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில், காங்கிரஸில் இருந்து ஒருவரும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் உட்பட மொத்தம் 18 பேர் பாஜகவில் பாஜகவில் இணைந்தனர்.

யாருடன் கூட்டணி.? தலைமை அலுவலகத்தில் தேமுதிக நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை..!

கோமதி சீனிவாசன் (முன்னாள் அமைச்சர்), சேலஞ்சர் துரை- கோவை, M.V.ரத்தினம்- பொள்ளாச்சி, S.M.வாசன் – வேடசந்தூர்,  சந்திரசேகர்- சோழவந்தான் V.R.ஜெயராமன்- தேனி, பாலசுப்ரமணியன்- சீர்காழி, R.தங்கராசு- ஆண்டிமடம் உள்ளிட்ட 15 முன்னாள் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்