அதிமுக முன்னாள் MLA மார்க்கண்டேயன் திமுகவில் இணைந்தார்

Published by
Venu

மார்க்கண்டேயன் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். 

விளாத்திகுளம் சட்டசபை தொகுதிக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சின்னப்பன்.அந்த  அந்ததேர்தலில் வேட்பாளர்களாக தங்களை அறிவிக்கவில்லை என்ற ஏக்கம் ஒரு சிலருக்கு இருந்தது.அந்த வகையில் அதிமுக சார்பாக விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் விருப்பம் தெரிவித்திருந்தார்.அவருக்கு சீட் வழங்கவில்லை. இதனால் விளாத்திகுளம் இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதாக மார்க்கண்டேயன் அறிவித்தார்.

அதன்படி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் மார்க்கண்டேயன். இதனையடுத்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் அதிமுக செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார் என்று அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.எனவே தனித்துப்போட்டியிட்ட மார்க்கண்டேயன் அந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றார்.

இந்நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்கள்.

Published by
Venu

Recent Posts

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி! 

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

4 minutes ago

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

2 hours ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

2 hours ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

3 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

4 hours ago

“அவர் பொய் சொல்கிறார்., நாங்க அப்படி சொல்லவே இல்ல!” திட்டவட்டமாக மறுக்கும் கனிமொழி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…

5 hours ago