அதிமுக முன்னாள் MLA மார்க்கண்டேயன் திமுகவில் இணைந்தார்
மார்க்கண்டேயன் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
விளாத்திகுளம் சட்டசபை தொகுதிக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சின்னப்பன்.அந்த அந்ததேர்தலில் வேட்பாளர்களாக தங்களை அறிவிக்கவில்லை என்ற ஏக்கம் ஒரு சிலருக்கு இருந்தது.அந்த வகையில் அதிமுக சார்பாக விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் விருப்பம் தெரிவித்திருந்தார்.அவருக்கு சீட் வழங்கவில்லை. இதனால் விளாத்திகுளம் இடைத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுவதாக மார்க்கண்டேயன் அறிவித்தார்.
அதன்படி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் மார்க்கண்டேயன். இதனையடுத்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் அதிமுக செய்தி தொடர்பாளர் மார்க்கண்டேயன் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்யப்படுகிறார் என்று அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.எனவே தனித்துப்போட்டியிட்ட மார்க்கண்டேயன் அந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்றார்.
இந்நிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்கள்.