முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருக்கையில் சிலர் அவரது கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
கரூர் ஊராட்சி குழு துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் திருவிக என்பவரை அழைத்துக்கொண்டு, முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தார்.
கரூர் மாவட்ட ஊராட்சியில் உள்ள 12 இடங்களில் திமுக 6 உறுப்பினர்களையும், அதிமுக 6 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. அதனால் துணை தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் திருவிகவை மதுரையில் வைத்திருந்து, இன்று மதியம் 2மணிக்குள் கரூருக்கு நேரில் வரவேண்டும் என்ற சமயத்தில் தான் இன்று விஜயபாஸ்கருடன் திருமா வந்துள்ளார்.
அப்போது வேடசந்தூர் அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருக்கையில், காரில் வந்த சிலர் விஜயபாஸ்கர் காரை வழிமறித்து, கண்ணாடி உடைத்துள்ளனர். மேலும், திருவிகவை கட்த்தி சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் அதிமுகவினர் குவிந்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…