ராகுல் காந்தி பாராட்டு டிவீட்டை ‘டெலிட்’ செய்த செல்லூர் ராஜு.!

Sellur Raju - Rahul Gandhi

சென்னை: ராகுல் காந்தியை பாராட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிவிட்ட டிவீட் அழிக்கப்பட்டது.

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தனது டிவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பற்றி பதிவிட்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனை தற்போது நீக்கி மீண்டும் பேசுபொருளாக மாற்றியுள்ளார் செல்லூர் ராஜு.

செல்லூர் ராஜு தனது டிவிட்டர் பக்கத்தில், ராகுல் காந்தி வீடியோ பதிவிட்டு அதில், நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். அதிமுக தற்போது பாஜகவுடன் கூட்டணியில் இல்லை. காங்கிரஸ் தற்போது திமுக கூட்டணியில் இருக்கிறது. இப்படியான சூழலில் செல்லூர் ராஜுவின் பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது.

ராகுல் காந்தி பற்றிய கருத்து செல்லூர் ராஜுவின் சொந்த கருத்து என்று அதிமுகவினர் கூறி வருகின்றனர். இப்படியான சூழலில் தற்போது தனது டிவிட்டர் பதிவை செல்லூர் ராஜு நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, செல்லூர் ராஜு, மதுரை தெப்பக்குளத்தில் மின்விளக்கு கோபுரம் அமைந்ததற்கு திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்பி சு.வெங்கடேசனுக்கு பாராட்டு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்