அணில்களால் மின்தடை ஏற்படுகிறது என்று கண்டுபிடித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,தமிழகத்தில் செடி, கொடிகளால் மட்டும் மின்வெட்டு பிரச்சனை ஏற்படுவதில்லை.அதன் மேலே ஓடும் அணில்கள் இரண்டு வயர்களை உரசுவதாலும் மின் துண்டிப்பு ஏற்பட்டு,அதனால் மின்தடை ஏற்படுவதாக கூறியிருந்தார்.
இதனையடுத்து,நெட்டிசன்கள்,அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கூறியதற்கு கிண்டலளிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வந்தனர்
இந்நிலையில்,இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு,”அணில்களால் மின்தடை ஏற்படுகிறது என்று கண்டுபிடித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு ஆஸ்கார் விருது மற்றும் நோபல் பரிசு வழங்க வேண்டும்.
நல்ல வேளையாக நான் தப்பித்து விட்டேன்.மேலும்,எங்கள் ஆட்சியில் வெளிநாடுகள் சென்ற அணில்கள் தற்போது தமிழ்நாட்டில் உள்ள மின்கம்பிகளில் சென்றுக்கொண்டிருகின்றன”,என்று தெரிவித்துள்ளார்.
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…
மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும்…
கோவை : அதிமுக கட்சிக்குள் என்ன நடக்கிறது? எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே என்ன பிரச்சனை, என்று அரசியல் வட்டாரத்தில்…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…